காரிமங்கலம் பகுதியில் நேற்று மாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியாம்பட்டி அருகே பூனாத்தன அள்ளி கிராமத்தில் உள்ள சில்லி சிக்கன் கடையில் சிலர் மது குடித்து கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் மதுப்பிரியர்கள் ஓட்டம் பிடித்தனர்.
இதையடுத்து சட்டவிரோதமாக கடைக்குள் மது குடிக்க அனுமதித்த சில்லி சிக்கன் கடை உரிமையாளர் சேகர் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடையில் இருந்து பிளாஸ்டிக் டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.