தமிழ்நாடு திமுக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய மின் இணைப்புகள் குறித்த விவரங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில், ”2016-2021 ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சியில் உழவர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த வேளாண் மின் இணைப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 38ஆயிரத்து 592 மட்டுமே. ஆனால், திராவிட மாடல் ஆட்சியில் மூன்றே ஆண்டுகளில் அந்த எண்ணிக்கையைக் கடந்து ஒரு லட்சத்து 69ஆயிரத்து 564 புதிய மின் இணைப்புகளை வழங்கி சாதனை படைத்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.