தர்மபுரியில் கோர விபத்து: நிகழ்விடத்திலேயே பலி

4647பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து புலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி மாதேஸ். இவர் ஓசூரில் கட்டிடம் வேலை முடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் தனது நண்பர்களுடன் கார்த்திக், மூவேந்திரன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பாலக்கோடு புதிய தேசிய நெடுஞ்சாலை அருகே வந்து கொண்டிருந்தார். பி செட்டி அள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரில் வந்த மினி சரக்கு லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மாதேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர காயமடைந்த கார்த்திக் மற்றும் மூவேந்தரனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து பாலக்கோடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி