அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

79பார்த்தது
தர்மபுரி மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட் டமைப்பு சார்பில், தொழி லாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி, பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நேற்று செப்டம்பர் 24 ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏஐடியூசி மாவட்ட செயலாளர் கே. மணி தலைமை வகித்தார். தொமுச மாவட்ட தலைவர் அன்புமணி, மாவட்ட செயலாளர் சண்முகராஜா, தொமுச அரசு போக்குவரத்து கழக தலைவர் சின்னசாமி, சிஐடியூ மாவட்ட செயலாளர் ஜீவா, மாவட்ட துணை தலைவர் முரளி, மாநிலக் குழு உறுப்பினர் பழனி, ஐஎன்டியூசி மாவட்ட தலைவர் சிவலிங்கம், ஏஐடியூசி மாவட்ட தலைவர் மாதேஸ்வரன், ஏஐசிசிடியூ மாவட்ட செயலாளர் முருகன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அனைவருக்கும் குறைந்த பட்ச மாத ஊதியம் 26, 000 வழங்க வேண்டும். மோட்டார் வாகன சட்டத்திருத்தம், மின்சார விநியோக சட்ட திருத்தங் களை கைவிட வேண்டும். சமவேலைக்கு சம ஊதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியா ருக்கு விற்ககூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி