தருமபுரிலிருந்து சிங்கப்பூருக்கு புடலங்காய் ஏற்றுமதி.

54பார்த்தது
தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறுகிய காலங்களில் மகசூல் கிடைக்கும் என்பதால் அங்குள்ள விவசாயிகள் காய்கறி பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து தருமபுரி சந்தைகளில் விற்பனை செய்கின்றனர். ஆனால், தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

காய்கறிகளுக்கு சந்தைகளில் உரிய விலை கிடைக்காத காரணத்தால், விவசாயிகள் சாகுபடி செய்த புடலங்காய்களை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். விவசாயிகள் சாகுபடி செய்யும் காய்கறிகளை பெங்களூருவில் உள்ள வியாபாரிகள் பெங்களூர் விமான நிலையம் வழியாக சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

புடலங்காய் ஏற்றுமதிக்கு சிங்கப்பூரில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், முள்ளங்கி, வெண்டைக்காய், பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளும் மொத்தமாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்தி