தமிழ்நாடு அரசு கிராம, பகுதி சுகாதார செவிலியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள் ராஜேஸ்வரி, மாதம்மாள் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கூட்டமைப்பின் நிர்வாகிகள் லோகநாயகி, ஜெயந்தி, சுபத்ரா, சுலோச்சனா, பரிதா, சற்குணம், வளர்மதி, காமாட்சி, பிரியா, கல்பனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
சுகாதார செவிலியர்களுக்கு பணிசுமை, மன அழுத்தம் கொடுக்கக் கூடாது. பகுதி சுகாதார செவிலியர்களுக்கு கூடுதல் மையப் பொறுப்பு வழங்கக் கூடாது. காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பேசினார்கள். முடிவில் மாவட்ட செயலாளர் தேன்மொழி நன்றி கூறினார்