வார சந்தையில் 11 லட்சத்திற்கு தேங்காய்கள் விற்பனை

85பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம் பகுதியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாட்களில் பிற்பகல் நேரத்தில் தேங்காய்கள் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது இந்த நிலையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற தேங்காய் வாரச் சந்தைக்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தேங்காய்களை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர் இந்த நிலையில் ஆடி மாதத்தின் என்பதால் கோவில் திருவிழாக்கள் பண்டிகைகள் நடைபெற உள்ளது அடுத்து தேங்காய் விற்பனை ஜோராக நடைபெற்றது அளவைப் பொறுத்து ஒரு தேங்காய் 7 ரூபாய் முதல் 11 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது மேலும் நேற்று ஒரே நாளில் 11 லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி