பஞ்சாயத்து செயலர்கள் கடிதம் அனுப்பும் போராட்டம்

73பார்த்தது
பஞ்சாயத்து செயலர்கள் கடிதம் அனுப்பும் போராட்டம்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில், ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி, தர்மபுரி தலைமை தபால் நிலையத்தில் கடிதம் அனுப்பும் போராட்டம் இன்று(செப்.19) நடந்தது.

கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலர்கள், சிறப்பு கால முறை ஊதியம் பெற்றுவந்த போது, வழங்கப்பட்ட ஓய்வூதிய தொகையான 2000 மட்டுமே இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது. இதே ஊதிய விகிதத்தில், ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவுரு எழுத்தர்களுக்கு, அரசின் ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது.

ஆனால், ஊராட்சி செயலர்கள் இது வரை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கப்படவில்லை.
ஊராட்சி செயலர்களை, தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி, தமிழக முதல்வர், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் இயக்குநர் ஆகியோருக்கு, தர்மபுரி மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் கடிதம் அனுப்பும் போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள் முருகன், சந்திரசேகரன், திருவருட்செல்வன். செந்தில், கிருஷ்ணன் மற்றும் துரைவேல், சிவலிங்கம், மோகன், லட்சுமணன், குணசேகரன், ராஜசேகர், வெங்கடேஷ், குமார், விஜயகுமார். சிவன், ராமதாஸ், மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி