கொளுத்தும் வெயிலால் எலுமிச்சை பழம் விலை உயர்வு

59பார்த்தது
தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை, சேலம் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து தர்மபுரி மாவட்டத்துக்கு எலுமிச்சை பழம் விற்பனைக் காக கொண்டு வரப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் குறைந்தளவிலேயே எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போதிய அளவில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை. தண்ணீர் பற்றாக்குறையால், விளைச்சல் கடுமையாக பாதிக்

கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் நெல் லூர், ஆனந்தபுதூர் பகுதியில் இருந்து, எலுமிச்சை பழம் தர்மபுரி மாவட்டத்திற்கு விற்ப னைக்கு வருகிறது. கடந்த மாதம் சில்லரையில் ஒரு பழம் ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது கோடை தொடங்கிய நிலையில், எலுமிச்சை வரத்து சரிந்து, விலை உயர்ந்துள்ளது. ஒரு எலுமிச்சை ₹4 முதல் ₹10 வரை நேற்று மார்க்கெட்டில் விற் பனை செய்யப்பட்டது. தர்மபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ எலுமிச்சை ₹150க்கு விற்பனை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி