அரூர் அடுத்த கம்பைநல் லூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை கூடுகிறது. மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் ஆடு, கோழிகளை விற்பனைக்கு சந்தைக்கு ஓட்டி வருகின்றனர். ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஆம்பூர், காரி மங்கலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள், இறைச்சி கடைக்காரர்கள் வருகின்றனர். நேற்று நடந்த சந்தைக்கு200க்கும் மேற்பட்ட ஆடுகளை, விவசாயி கள் ஓட்டி வந்தனர். அதிகாலை தொடங்கிய சந்தையில் வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கினர். தொடர் மழை பெய்து வருவதால், ஆடு விற்பனை அதிகரித்தது. விலையும் சற்று அதிகரித்தது. வெள்ளாடு, செம்மறி ஆடுகள் ₹5, 500 முதல் ₹9, 500 வரையும், நாட்டுக்கோழி, சேவல் ஆகியவை ₹300 முதல் ₹1, 200 வரையும் விற்ப னையானது. ஒட்டு மொத்தமாக நேற்றைய சந்தையில், ₹21 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.