தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் லட்சுமி நாராயாணா திருமண மண்டபத்தில் மொரப்பூர் மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் R. பன்னீர் செல்வம், தலைமையில் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ரத்தினவேல் ஏற்பாட்டில் மொரப்பூர் மேற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர்
பி. பழனியப்பன் M. Sc, Phd, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர். ஆ. மணி B. Com, BL, MP, ஆகியோர் ஆலோசனை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள். இந்த நிகழ்வில் மாநில தீர்மான குழு செயலாளர் விசுவநாதன், மாவட்ட அவைத் தலைவர் மனோகரன். Ex. MLA, மாநில ஆதிதிராவிட நலக் குழு துணை செயலாளர் S. ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர்
கிருஷ்ண குமார், அரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் R. வேடம்மாள். Ex. MLA, மற்றும் ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி பொறுப்பாளர்கள் கழக முன்னோடிகள் கலந்துக் கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 40/40 வெற்றி பெற்ற திமுக தலைவர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. உள்ளாட்சி, தேர்தல் கூட்டுறவு தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தல் மற்றும் கழக ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
சட்டமன்ற தொகுதிக்கு ஒரு நூலகம் அமைப்பது. சட்டமன்ற தொகுதிக்கு ஒரு கலைஞர் திருவுருவ சிலை அமைப்பது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.