தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை பகுதியில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தட்சிண காலபை திருத்தலம் அமைந்துள்ளது. இன்று
ஆடி மாதம் 12ஆம் நாள் தேய்பிறை அஷ்டமி காலை 5. 30மணிக்கு விஸ்வரூப தரிசனம் காலை 6 மணி அளவில் கணபதி ஹோமம் 64 பைரவர் ஹோமம் ஏகாந்த ருத்ர ஹோமம் காலை 8 மணிக்கு கோ பூஜை அஸ்தவ பூஜை காலை 8. 30 மணிக்கு பைரவர் உற்சவமூர்த்தி திருக்கோயிலை வளம் வருதல் பைரவருக்கு காலை 9 மணிக்கு 18 வகையான அபிஷேகங்கள் சுவாமிக்கு ராஜ அலங்காரம் சிறப்பு தரிசனம் நடைபெற்றது.
28. 7. 2024 ஞாயிற்றுக்கிழமை
இரவு 10மணிக்கு, 1008கிலோ மிளகாய் 108 கிலோ மிளகு சத்ரு சம்ஹார யாகம் நடைபெறும் 64 பைரவர் யாகம் மகா குருதி பூஜை இரவு 2. 30மணிக்கு பைரவர் சுவாமி பல்லாக்கில் திருக்கோயிலை வளம் வருதல் அதிகாலை 3 மணிஅளவில் 108 லிட்டர் பால் அபிஷேகம் கலச அபிஷேகம் எட்டு வகையான பல அபிஷேகங்கள் சுவாமிக்கு சத்ரு சம்ஹாரம் அலங்காரம் செய்யப்படும் சதுர்வேத பாராயணம் சிறப்பு தரிசனம் நடைபெறும் அது சமயம் அனைத்து பக்த கோடிகளும் வந்து சுவாமி ஸ்ரீ தட்சணகாசி காலபைரவர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீபங்களை ஏற்றி வேண்டுதல்களை நிறைவேற்றினர் பக்தர்கள் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்து நீண்ட வரிசையில் நின்ற கால பைரவரை தரிசனம் செய்தனர் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.