இளையராஜாவாக தனுஷ் - இயக்குநர் பால்கி தகவல்!

655பார்த்தது
இளையராஜாவாக தனுஷ் - இயக்குநர் பால்கி தகவல்!
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 1400க்கும் அதிகமான படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்நிலையில், தனியார் சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல இயக்குநர் பால்கி, “தனுஷ் நடிப்பில் இளையராஜாவின் வாழ்க்கைக் கதையை படமாக்குவதே என் கனவு. தனுஷ் இளையராஜாவைப் போல இருக்கிறார்; இந்த கதை படமாக்கப்பட்டால், என்னைப் போன்ற ஒரு இளையராஜா ரசிகனுக்கு நான் கொடுக்கும் பரிசாக இருக்கும்” என தகவல் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த சில நாட்களாக இப்படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானது.

தொடர்புடைய செய்தி