திருச்செந்தூரில் யானை தெய்வானை தாக்கி பாகன் உள்ளிட்ட இருவர் உயிரிழந்ததன் எதிரொலியாக, திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி பக்தர்களுக்கு ஆசீர்வாதம் செய்யவோ, பக்தர்கள் அருகே செல்வதற்கோ அனுமதி இல்லை. நேற்று (நவ., 18) முதலே யானை அறைக்குள் பூட்டி வைக்கப்பட்டு உணவு மட்டுமே வழங்கப்படுகிறது. திருச்செந்தூர் யானை தெய்வானையை புத்துணர்வு முகாமுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.