ஒடிசா சம்பல்பூர் - சரளா அருகே சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இன்று காலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்தை தொடர்ந்து, ஒடிசாவில் சரக்கு ரயில் தடம் புரண்டுள்ளது. இதனிடையே, 13 நாட்களில் 9 ரயில் விபத்துகள் நடைபெற்றுள்ளது. தொடர் ரயில் விபத்துகளால், ரயில்வே துறையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதால் ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைக்கின்றனர்.