தெலங்கானா காங்கிரஸில் உட்கட்சி பூசல்.. யார் அடுத்த முதல்வர்..?

47225பார்த்தது
தெலங்கானா காங்கிரஸில் உட்கட்சி பூசல்.. யார் அடுத்த முதல்வர்..?
தெலுங்கானா உருவான பிறகு முதல் முறையாக பிஆர்எஸ் கட்சியின் 9 ஆண்டு ஆட்சிக்கு பிறகு, தற்போது மூன்றாவதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக உள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 64 தொகுதிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ரேவந்த் ரெட்டி முதலமைச்சராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் ஒருமித்த கருத்து இல்லாததால் முதலமைச்சர் பதவி குறித்து தேசிய தலைமைக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. 44 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே, ரேவந்த் ரெட்டிக்கு ஆதரவாக உள்ளனர். முதலமைச்சர் பொறுப்பை ஏற்கும் போட்டியில் உத்தம் குமார் ரெட்டி, மல்லு பாட்டி, கோமதிரெட்டி சகோதரர்களும் உள்ளனர். இதனால் ரேவந்த் ரெட்டிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி