பிரதமர் பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டம்

65பார்த்தது
பிரதமர் பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலகக் கோரி, அந்நாட்டு மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஸா போர் தொடங்கி 6 மாதங்களை கடந்து விட்ட நிலையில், ஹமாஸ் வசம் சிக்கி இருக்கும் 130 பணயக் கைதிகள் இதுவரை மீட்கப்படவில்லை. எனவே பணயக் கைதிகளை விடுதலை செய்யவும், முன்கூட்டியே இஸ்ரேலில் பொது தேர்தல் நடத்தவும் வலியுறுத்தி, போராட்டக்காரர்கள் தொடர்ந்து போரடி வருகின்றனர். “பணயக் கைதிகளை மீட்க நான் எதையும் செய்வதில்லை என்று சொல்வது தவறு, 24 மணி நேரமும் அதற்காக உழைத்து வருகிறேன்” என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.