லக்னோவை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி

67பார்த்தது
லக்னோவை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய (மே 14) லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி நிர்ணயித்த 209 ரன்கள் இலக்குடன், எல்எஸ்ஜி களம் இறங்கி 20 ஓவர்களில் 189 ரன்களுக்கு சுருண்டது. டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளும், கலில் அகமது, அக்சர் பட்டேல், முகேஷ் குமார், குல்தீப் யாதவ் மற்றும் ஸ்டப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். லக்னோ அணிக்கு இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில், பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

தொடர்புடைய செய்தி