சந்தானம் நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை நடிகர் ஆர்யா தயாரிக்க பிரேம் ஆனந்த் இதனை இயக்குகிறார். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஆப்ரோ இதற்கு இசையமைக்கிறார். இந்த படமானது 2025 மே மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் வருகின்ற பிப்ரவரி 26 ஆம் தேதி காலை 11 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.