தலித் பெண் வீடு எரிப்பு.. கொடூர செயல் (வீடியோ)

57321பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள சென் பஸ்சிம் பாராவில் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. ஒரு தலித் குடும்பம் ஒரு வீட்டின் வழியே நடந்து சென்றபோது, ஒரு உயர் சாதிக் குடும்பம் அந்த தலித் பெண்ணை அவர்களது காலில் விழச்சொல்லியுள்ளனர். அதற்கு அந்த பெண் மறுத்துள்ளார். இதனையடுத்து அவரது தலை முடியை பிடித்து இழுத்து கீழே வீசப்பட்டு தாக்கப்பட்டார். பின்னர் அந்த பெண்ணின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் புகாரின் அடிப்படையில், போலீசார் அவர்கள் மீது எஸ்சி-எஸ்டி வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி