இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனன் குமார் மிஸ்ரா, இந்திய பார் கவுன்சிலின் தலைவராக மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று சிறப்புமிக்க தொடர்ச்சியாக ஏழாவது முறையாக அவர் பார் கவுன்சிலின் தலைவராக தேர்வாகி இருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை, இந்திய பார் கவுன்சில் (பிசிஐ) கடந்த சனிக்கிழமை (மார்ச் 1) அறிவித்தது. இந்நிலையில், “என் மீது வைத்த நம்பிக்கை மற்றும் ஆதரவிற்காக மனமார்ந்த நன்றி” என மிஸ்ரா தெரிவித்தார்.