மாவட்ட ஆட்சியர் பல்வேறு இடங்களில் ஆய்வு

62பார்த்தது
மாவட்ட ஆட்சியர் பல்வேறு இடங்களில் ஆய்வு
விருத்தாசலம் தொகுதிக்கு உட்பட்ட நல்லூர் கிராமத்தை சுற்றியுள்ள கிராம பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் மூலம் கீழ்காணும் கோரிக்கைகள்:

1. நல்லூர் ஸ்ரீ வில்வனேஸ்வரர் ஆலயம் முன்பு செல்லும் மணிமுக்தாற்றின் கரையில் படித்துரை மற்றும் தடுப்புச்சுவர் அமைத்தல்.

2. இலங்கியனூர் கிராமத்திற்கு முன்பு செல்லும் ஆற்றின் இருகரைகளிலும் தடுப்புச்சுவர் அமைத்தல்.

3. ஐவதுகுடி முன்பு செல்லும் மணிமுக்தாற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்தல்.

4. இலங்கியனூர் அருகே இரயில் வழிதடத்தில் பாலம் அமைத்தல்.

இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் சிபி. ஆதித்யசெந்தில் குமார் நல்லூர் மற்றும் இலங்கியனூர் கிராமத்திற்கு நேரில் சென்று இன்று(செப்.13) ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி