கடலூரில் இருந்து லாரி ஒன்று தொழுதூர் நோக்கி புறப்பட்டது. லாரியை திருச்சி பகுதியை சேர்ந்தராமசாமி என்பவர் ஓட்டினார். அந்த லாரி வேப்பூர் அடுத்த நாரையூர் விருத்தாசலம்-வேப்பூர் சாலையில் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர புளிய மரத்தில் மோதியது.
இதில் லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த டிரைவர் லாரியின் இடிபாட்டில் சிக்கி வெளியே வர முடியாமல் வலியால் அலறினார். இதுபற்றி தகவல் அறிந்த வேப்பூர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி இடிபாட்டில் சிக்கிய ராமசாமியை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.