புகையிலை பொருட்கள் விற்ற இரண்டு பேர் கைது

76பார்த்தது
புகையிலை பொருட்கள் விற்ற இரண்டு பேர் கைது
கடலூர் மாவட்டம், பண்ருட்டி புதுப்பேட்டை அருகே பைத்தாம்பாடி பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான காவல் துறையினர் தீடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஞானமணி மகன் திருமுருகன் (வயது 27), பாண்டுரங்கன் மனைவி குப்பு (53) ஆகிய 2 பேர் தங்களது பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி