பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவாமூர் பாலத்தின் அருகே புதுவை மாநிலம் மடுகரை முத்துநகர் 4-வது தெருவை சேர்ந்த தங்கமணி என்பவரது மகன் கர்ணன் (வயது 39) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட புதுச்சேரி மாநில சாராய பாக்கெட்டுகளை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 100 பாக்கெட்டு சாராயத்தை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.