நெய்வேலி: பாமக பொதுக்குழு கூட்டம்

60பார்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்‌. எல். சி. பாட்டாளி தொழிற்சங்கம் அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பாமக கடலூர் வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 1) தமிழகத்தில் சமூக நீதிக்கு வித்திட்ட தந்தை பெரியாருக்கு பின், சமூக நீதிக்காக போராடும் மரு. அய்யா அவர்கள் கடந்த 29-12-2023 அன்று தமிழக முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து சாதிவாரி கணக்கெடுப்பு (வகுப்புவாத விகிதாச்சாரம்), வன்னியர்களுக்கான 10. 5 சதவிகித உள்ஒதுக்கீட்டினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, விரைவில் நடை முறைப்படுத்திட வலியுறுத்தியதை பாராட்டியும், அவருக்கு பா. ம. க. , கடலுார் வடக்கு மாவட்டத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்தும், மேலும் மரு. அய்யாவின் கோரிக்கைகளுக்கு வலு சேர்க்கும் விதமாக தமிழக அரசை வற்புறுத்தியும் இப்பொதுக்குழுவில் தீர்மானம் நிறை வேற்றப்படுகிறது.

தொடர்புடைய செய்தி