கிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்வேறு வீட்டுக்குள் கிருஷ்ணன் நடந்து வருவது போல கோலமிட்டும், சீடை, முறுக்கு, அப்பம் உள்ளிட்ட பலகாரங்களோடு அவல், வெண்ணெய் உள்ளிட்டவற்றை நிவேதனம் செய்தும் வழிபட்டனர்.
இது மட்டும் இல்லாமல் கிருஷ்ணர் சிலைகள், பூஜை பொருட்கள் அதிகளவில் விற்பனையாகியுள்ளன. மக்கள் வீடுகளில் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு மகிழ்ந்தனர்.