கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசடிகுப்பம் கிராமத்தில் வடக்குத்து ரோட்டரி சங்கம், நெய்வேலி ரோட்டரி சங்கம், பாரதி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி மற்றும் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது நல மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.