கடலூர் மாவட்டம் கோண்டூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஜோதி நகரில் அம்மா பூங்காவில் காலை மற்றும் மாலை வேலைகளில் முதியவர்கள், இளைஞர்கள் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
இந்த நிலையில் பூங்காவை சுற்றியுள்ள நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் ஒன்று கூட எரியாமல் இருள் சூழ்ந்த நிலையில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.