தேசிய கல்விக் கொள்கை மற்றும் இந்தி திணிப்பை எதிர்த்து கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் வாயில் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியை தமிழகத்தில் திணிக்கும் வகையில் மும்மொழி கொள்கை வருவதாக கூறி மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கடலூர் அரசு கலைக் கல்லூரியில் இன்று நடைபெற்றது.