சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி, பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் புதுக்குப்பம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பயன்பாட்டிற்கு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கேஏ பாண்டியன் எம்எல்ஏ கோரிக்கையை ஏற்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சருமான சிவி. சண்முகம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் மதிப்பில் பெஞ்ச், டெஸ்க் மற்றும் தளவாடப் பொருட்களை இன்று பள்ளியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கே. ஏ. பாண்டியன் வழங்கினார். உடன் முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.