கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம், சிதம்பரம் அடுத்த கொத்தங்குடி பகுதி மக்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் சிதம்பரம் பஸ் நிலையம் மற்றும் கொத்தங்குடி தெருவில் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடைகளை கடந்து தான் தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். டாஸ்மாக் கடைகளில் மது அருந்திய வர்கள் போதை தலைக்கேறியதும் ஆபாசமாக பேசிக்கொண் டிருக்கின்றனர். மேலும் அங்குள்ள பூங்காவில் அமர்ந்து குடிக்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது