கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் உற்பத்தி, விற்பனை, கஞ்சா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை நடைபெறுவது குறித்து தெரியவந்தால் பொதுமக்கள், காவல்துறை மதுவிலக்கு பிரிவு கைபேசி எண்ணில் (7418846100) தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விழிப்புணர்வு பேனர்கள் கடலூர், குண்டு சாலை உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்கள் பார்வையில் படும்படி வைக்கப்பட்டுள்ளன.