கடலூர் மாவட்டம் கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி) சட்டமன்ற தொகுதியில் 2025 ஆம் ஆண்டுக்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கடலூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1, 16, 622 பெண் வாக்காளர்கள் 1, 26, 784 மூன்றாம் பாலினம் 82 பேர் என மொத்தம் 2, 43, 488 வாக்காளர்கள் உள்ளனர். சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1, 20, 938, பெண் வாக்காளர்கள் 1, 25, 537, மூன்றாம் பாலினம் 37 பேர் என மொத்தம் 2, 46, 512 வாக்காளர்கள் உள்ளனர். காட்டுமன்னார்கோவில் ( தனி) சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1, 15, 629, பெண் வாக்காளர்கள் 1, 16, 693 மற்றும் மூன்றாம் பாலினம் 13 பேர் என மொத்தம் 2, 32, 335 வாக்காளர்கள் உள்ளனர்.