கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ரயில் நிலையம் அருகே வாரந்தோறும் வியாழக்கிழமை மாலை கூடும் சந்தை கடையை பரங்கிப்பேட்டை வட்டார தொழில் வர்த்தக சங்கம் நிர்வாகிகள் நேரில் சென்று வியாபாரிகளின் நலன் மற்றும் குறைகள் குறித்து கேட்டறிந்து கொண்டனர். இதில் சங்க தலைவர் ஆனந்தன், பொதுச் செயலாளர் சாலிஹ் மரைக்காயர், துணைச் செயலாளர் கவிமதி, மக்கள் தொடர்பு அலுவலர் ரமேஷ் மற்றும் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.