'ஆவேசம்' படம் பார்க்க சென்று ஆவேசமான ரசிகர்கள்!

64பார்த்தது
'ஆவேசம்' படம் பார்க்க சென்று ஆவேசமான ரசிகர்கள்!
கோவை ரேஸ்கோர்ஸ் அருகே உள்ளது கே.ஜி திரையரங்கம். கோவையில் பிரபலமான இந்த திரையரங்கில் ஆவேசம் என்ற மலையாள திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்த படத்தை பார்க்க இளைஞர்கள் பலர் வந்திருந்தனர். அப்போது திரையரங்கில் ஏசி போடவில்லை என நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். அதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த இளைஞர்கள் திரையரங்க நிர்வாகத்திடம் ஏசியை சரி செய்யுங்கள் இல்லையென்றால் டிக்கெட் பணத்தை திருப்பி தாருங்கள் என முறையிட்டுள்ளனர். பின்னர் போலீஸ் வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி