எம்.எல்.ஏ மகன், மருமகளுக்கு பிப்.9 வரை நீதிமன்றக் காவல்

52227பார்த்தது
எம்.எல்.ஏ மகன், மருமகளுக்கு பிப்.9 வரை நீதிமன்றக் காவல்
பணிப்பெண்ணை தாக்கி கொடுமைப்படுத்திய புகாரில் கைதாகியுள்ள எம்.எல்.ஏ மகன், மருமகளுக்கு பிப்.9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மற்றும் மருமகள் மெர்லினா, தனது வீட்டில் பணிப்பெண் ஒருவரை வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்று கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக எஸ்.சி., எஸ்.டி. உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த இருவரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஆந்திராவில் பதுங்கியிருந்த ஆண்ட்ரோ, மெர்லினா ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்கள் இருவருக்கும் பிப்.9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.