கொரோனா பாசிட்டிவ்.. இளைஞர் தற்கொலை?

560பார்த்தது
கொரோனா பாசிட்டிவ்.. இளைஞர் தற்கொலை?
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய திருவனந்தபுரத்தை சேர்ந்த 32 வயது நபருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ஆர்டி-பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இது கொரோனாவின் உருமாறிய வைரஸா என்பதை கண்டறிய அவரது மாதிரி லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டது. முடிவுகள் வரும்வரை மருத்துவமனையில் இருங்கள் என அவரிடம் கூறப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்து அவர் மாயமாகியுள்ளார். பின்னர் அவர் ஆக்ரா நீரோடையில் பிணமாக கிடந்தார். இது தற்கொலையா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி