தலித் பெண்ணை கொடூரமாக தாக்கிய காவலர்

5120பார்த்தது
தலித் பெண் ஒருவரை காவலர் நடுரோட்டில் லத்தியால் அடித்த கொடூர சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சிதாமர்ஹியில் இச்சம்பவம் நடந்துள்ளது. தலித் பெண் ஒருவரை காவலர் ராஜ்கிஷோர்சிங் நடுரோட்டில் கடுமையாக தாக்கியுள்ளார். இரண்டு பெண்கள் சாலையில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டுள்ளனர். இந்த விவகாரத்தில்தான் போலீசார் தலித் பெண்ணை லத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. காவலர் மீது தவறு இருக்கும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சிதாமர்ஹி எஸ்பி மனோஜ் குமார் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி