ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகள் குறித்து பாலின சமத்துவமற்ற பிற்போக்கு கருத்தை நேரலையில் பேசிய மூத்த விளையாட்டு வர்ணனையாளர் பாப் பல்லார்ட், நேரலை ஒளிபரப்பில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டு, வர்ணனையாளர் பட்டியலிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
“இப்பெண்கள் இப்போதுதான் வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். பெண்கள் பெரும்பாலும் சுற்றித்திரிவது, Makeup போடுவது போன்ற விஷயங்களையே அதிகம் விரும்புவர் என்பது உங்களுக்கு நன்கு தெரியும்" என பேசியிருந்தார்.