மத்தியகுழு தலைமை செயலாளருடன் ஆலோசனை

361பார்த்தது
மத்தியகுழு தலைமை செயலாளருடன் ஆலோசனை
மிக்ஜாம் புயலை பார்வையிட வந்த மத்திய குழு, தலைமை செயலாளருடன் அலோசனை நடத்தி வருகிறது. மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் பெரிது பாதிப்படைந்தது. இன்னும் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்தநிலையில், பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு சென்னை வந்தது. தொடர்ந்து, மிக்ஜாம் புயல் பாதிப்பு தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உடன் மத்தியக் குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் வருவாய், நிதித்துறை, போக்குவரத்து, நெடுஞ்சாலை, காவல் உள்ளிட்ட துறை செயலாளர்கள், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி