தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் (டிட்டோ ஜாக்) 13 அம்ச கோரிக்கைகளில் சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வழிவகையை மேற்கொண்டு வருகிறோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்து அவர், கட்டாய கல்வி உரிமை சட்டத்துக்கு ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டிய நிதி குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம் என கூறினார்.