காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் தொடங்கியது!

83பார்த்தது
காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் தொடங்கியது!
டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை எம்.பி.க்கள் மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் ராகுல் காந்தியை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி