BREAKING: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை - முக்கிய அம்சங்கள்

50630பார்த்தது
BREAKING: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை - முக்கிய அம்சங்கள்
மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்.

* மார்ச் 2024 வரை பெறப்பட்ட அனைத்து கல்விக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.

* ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும்.

* ரயிலில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படும்.

* நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும்.

* 100 நாள் வேலைத்திட்டம் ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும்.

* இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும்

தொடர்புடைய செய்தி