வெங்காயம் மீண்டும் விலை உயரும் அபாயம்

44774பார்த்தது
வெங்காயம் மீண்டும் விலை உயரும் அபாயம்
கடந்த ஆண்டு இறுதியில் வெங்காயத்தின் விலை மிக அதிகமாக உயர்ந்து காணப்பட்டது. 200 ரூபாய் வரையிலும் ஒரு கிலோ விற்கப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதனால் மார்ச் மாதம் வரை வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி தடை செய்யப்பட்டது. வெளிநாட்டிற்கு கூடுதலாக 10,000 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதால் இந்தியாவில் வெங்காயம் மீண்டும் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது வெங்காயத்தின் விலை 30 முதல் 40 ரூபாய் வரையிலும் விற்கப்படும் நிலையில் அதன் விலை மீண்டும் உயரக்கூடும் என்று கூறப்படுகிறது.