ஓட்டுக்கு பணம் குறித்த புகார் - 100 நிமிடங்களில் நடவடிக்கை

32803பார்த்தது
ஓட்டுக்கு பணம் குறித்த புகார் - 100 நிமிடங்களில் நடவடிக்கை
ஓட்டுக்கு பணம் கொடுப்பது பற்றி புகார் அளித்தால் அதன்பேரில் 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். பணம், டோக்கன், பரிசுப் பொருட்கள் வழங்கினால், 'சி-விஜில்' மொபைல் செயலியில் புகைப்படம் அல்லது வீடியோவாக, பொதுமக்கள் அனுப்பினால், அடுத்த 100 நிமிடங்களில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ஓட்டுக்களை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்றார்.

தொடர்புடைய செய்தி