கொ.ம.தே.க. பொதுக்குழு - ஈஸ்வரன் எம்எல்ஏ பங்கேற்பு

75பார்த்தது
கொ.ம.தே.க. பொதுக்குழு - ஈஸ்வரன் எம்எல்ஏ பங்கேற்பு
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை சேலம் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று சங்ககிரி தனியார் திருமண மஹாலில் நடந்தது. சேலம் தெற்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கொ.ம.தே.க. பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசும் போது, வருகிற 4ஆம் தேதி ஈரோடு பெருந்துறையில் உலக சாதனை நிகழ்ச்சியாக வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்ற விழா நடக்கிறது. இதில் நம்முடைய பாரம்பரிய ஆடை அணிந்து கொள்ள வேண்டும் என்றார். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி