பிரபல நகைச்சுவை நடிகரும், குணசித்திர நடிகருமான நடிகர் கருணாகரனின் தந்தை காளிதாஸ் (77) இன்று (செப்டம்பர் 14) காலமானார். . உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் உயிர் பிரிந்தது. இந்த துயரமான செய்தியை நடிகர் கருணாகரன் கனத்த இதயத்தொடு பகிர்ந்துள்ளார். நடிகர் கருணாகரனின் தந்தை காளிதாஸ் மத்திய அரசின் உளவுத்துறையில் அதிகாரியாக 37 ஆண்டுகள் சேவையாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.