கோவை: சட்டவிரோத மதுபான பாட்டில்கள் விற்றவர் கைது

61பார்த்தது
கோவை: சட்டவிரோத மதுபான பாட்டில்கள் விற்றவர் கைது
கோவை மாவட்டம், வெள்ளலூர் பகுதியில் சட்டவிரோத மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போத்தனூர் காவல் நிலையத்திற்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, போத்தனூர் காவல் நிலைய காவலர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் உடனடியாக வெள்ளலூர் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த ஒரு நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவரிடம் தடை செய்யப்பட்ட மதுபான பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் எடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி (வயது 48) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, தண்டபாணியிடமிருந்து 8 சட்டவிரோத மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சட்டவிரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தொடர்ந்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி