பணம் பட்டுவாடா புகார்; அதிகாரிகள் சோதனை

550பார்த்தது
பணம் பட்டுவாடா புகார்; அதிகாரிகள் சோதனை
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் நேற்று இரவு பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதாக தேர்தல் பிரிவு கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது. அதன் பேரில் பறக்கும் படை அதிகாரி ராதிகா தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜவேலு, துணை ராணுவத்தினர் 2 பேருடன் அப்பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அத்துடன் அங்கு வந்த ஒரு‌ அப்போது அந்த பகுதியில் உள்ள பெண்களிடம் மற்றும் வீடுகளுக்கு சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்கள் தங்களுக்கு யாரும் பணம் பட்டுவாடா செய்யவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி